மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான ஹபீஸ் சயீது மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கும்படி, பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
2008-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீது. ஜமா உத்தாவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான இவர் மீது, சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கில், ஹபீஸ் உள்ளிட்டோர் மீது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, தங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யும்படி, ஹபீஸ் சயீது மற்றும் ஜமாத் உத் தாவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கல் செய்த மனுவை, லாகூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.