உலகம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விமானப்படை வீரர் நெற்றியில் ‘திலகம்’ வைக்க அனுமதி!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விமானப்படை வீரர் நெற்றியில் ‘திலகம்’ வைக்க அனுமதி!

EllusamyKarthik

இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்ஷன் ஷா என்பவர் அமெரிக்க நாட்டு விமானப்படையின் மூத்த ஏர்மேனாக பணி செய்து வருகிறார். அவர் சீருடை அணிந்து பணியில் இருக்கும் போது நெற்றியில் திலகம் வைத்துக் கொள்ள அமெரிக்க விமானப்படை அனுமதி அளித்துள்ளது. 

“விமானப்படையில் இது போல நடந்துள்ளதை அறிந்து எனது பெற்றவர்கள் மற்றும் எனது நண்பர்கள் என பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதனை அவர்கள் எனக்கு அனுப்பிய மெசேஜ் மூலம் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. 

இது ரொம்பவே புதிய ஒன்றாகும். இப்படி நடக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இப்போது நடந்துள்ளது. ஒரே வார்த்தையில் இதனை சொல்ல வேண்டுமென்றால் எனது அன்றாட பணியில் நான் தினந்தோறும் பொட்டு வைத்துக் கொண்டு பணியாற்றும் உணர்வை ‘அற்புதம்’ என்று மட்டும் தான் சொல்ல முடியும். எனது மத நம்பிக்கையை வெளிப்படையாக வெளிப்படுத்தும் சுதந்திரம் உள்ள இந்த நாட்டில் நான் வாழ்வதற்கு பெருமை கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார் அவர். 

கடந்த 2020 முதல் இது குறித்து அமெரிக்க விமானப் படை அதிகாரிகளிடம் அவர் பேசி வந்துள்ளார். மாதந்தோறும் தந்து மத நம்பிக்கையை வெளிப்படுத்த அனுமதிக்குமாறு அவர் கோரிக்கை வைத்து வந்துள்ளார்.