நடப்பாண்டுக்கான H1B விசா ஒதுக்கீடு நிறைவடைந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு பணிபுரிவதற்காக செல்லும் வெளிநாட்டினருக்கு ஹெச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 65,000 பேருக்கு ஹெச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர உயர்க்கல்வி படித்த 20,000 பேருக்கும் ஹெச் 1 பி விசா ஆண்டுதோறும் விசா வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டில் 65,000 பேருக்கான ஹெச் 1 பி விசா ஒதுக்கீடு எண்ணிக்கை எட்டப்பட்டு விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹெச் 1 பி விசா மூலம் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்தி: ரஷ்யா உதவியின்றி விண்வெளி நிலையத்தை பராமரிக்க முயற்சி