உலகம்

ஹைபர்லூப் போக்குவரத்துக்கு அமெரிக்கா அனுமதி

ஹைபர்லூப் போக்குவரத்துக்கு அமெரிக்கா அனுமதி

webteam

வெற்றிடக் குழாய்கள் மூலம் பயணம் செய்யும் ஹைபர்லூப் எனப்படும் திட்டத்துக்கு அமெரிக்க அரசு வாய்மொழியாக அனுமதி வழங்கி இருக்கிறது. 

தொழிலதிபரும் சாகச வீரருமான எலோன் மஸ்க் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். காற்று இல்லாத வெற்றிடக் குழாய்களில் ரயில் பெட்டிகள் போன்ற அமைப்பை மிக வேகமாக இயங்கச் செய்வதே ஹைபர்லூப் தொழில்நுட்பமாகும். இது தற்போது இருக்கும் அதிவேக ரயில்களைவிட மிக வேகமாக இயங்கும் என நம்பப்படுகிறது. சராசரியாக மணிக்கு 1,300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஹைபர்லூப் பெட்டிகள் ஏற்கெனவே நெவேடா பாலைவனத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இவை பயன்பாட்டுக்கு வந்தால், சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் பயணிக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.