காசா மருத்துவமனை தாக்குதல்  முகநூல்
உலகம்

காஸா மீதான தாக்குதலில் அதிகளவில் பாதிக்கப்படும் சிறார்கள் - UNICEF சொன்ன அதிர்ச்சி தகவல்!

காஸாவில் இருக்கும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், உயிரிழப்பை தடுக்கும் பொருட்டு போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் யுனிசெஃப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

webteam

காஸாவில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து சிறார் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள யுனிசெஃப் அமைப்பு, ஒரு நாளில் 420 குழந்தைகள் உயிரிழக்கின்றனர் அல்லது காயமடைகின்றனர் எனும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேற்குக் கரைப் பகுதியில் 37 சிறார் கொல்லப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலிய சிறார் 30 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகவும் யுனிசெஃப் கூறியுள்ளது.

israel gaza war

தற்போது நடைபெற்று வரும் சண்டையின் பாதிப்பை சிறாரின் உயிரிழப்பைக் கொண்டு அளவிட வேண்டிய மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் வேதனை தெரிவித்துள்ளது. வடக்கு காஸா பகுதியில் உள்ள ஷிபா மற்றும் அல்குத்ஸ் மருத்துவமனைகளுக்குத் தேவையான பொருள்களை வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்புக் கூறியுள்ளது.

ரஃபா எல்லை வழியாக 26 டிரக்குகளில் உதவிப் பொருள்கள் காஸா பகுதிக்குள் வந்துள்ளதாகவும், ஆனாலும் அதிமுக்கியத் தேவையாக உள்ள எரிபொருளை கொண்டு வர அனுமதி கிட்டவில்லை என்றும் ரெட் கிரசன்ட் தெரிவித்துள்ளது.