israel war pt desk
உலகம்

“காஸா பகுதியில் தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது” - ஐ.நா கவலை

webteam

இஸ்ரேல் நாட்டின் மீது அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் போரால், காஸாவில் இதுவரை காணாத வகையில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. போரை நிறுத்தக் கோரி ஐ.நா.வும், உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

காஸா மருத்துவமனை

இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் தொற்று நோய் பரவி வருவதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. ஐ.நா சார்பான பாதுகாப்பு இடங்களில் 5,30,000-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், கூட்டம் அதிகம் இருப்பதால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவாச தொற்று நோய்கள், வயிற்றுப் போக்கு, அம்மை உள்ளிட்ட பல நோய்கள் பரவி வருவதாகவும், புதிதாக வருவோருக்கு ஐ.நா பாதுகாப்பு இடங்களில் இடமில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளது.