உலகம்

வடகொரியாவுக்கு ஐ.நா. கண்டனம்

வடகொரியாவுக்கு ஐ.நா. கண்டனம்

webteam

வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது போன்ற பொறுப்பற்ற செயல்களை வடகொரியா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
அமெரிக்கா மற்றும் ஜப்பானின் வேண்டுகோளின் பேரில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, ஜப்பான் நாட்டின் ஹோக்கைடோ தீவு வழியாக, வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது. 3 வாரங்களில் நடைபெற்ற 2வது சோதனையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.