உலகம்

காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை - சீன கோரிக்கையை ஏற்று கூடுகிறது ஐ.நா

காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை - சீன கோரிக்கையை ஏற்று கூடுகிறது ஐ.நா

webteam

சீனாவின் கோரிக்கையை ஏற்று ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக ஐநா பொது சபை கூடுகிறது.

பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கடந்த 12ஆம் தேதி ஐநாவுக்கு எழுதிய கடிதத்தில் ஜம்மு - காஷ்மீரில் பதற்றம் அதிகரித்திருப்பது வருத்தமளிப்பதாக கூறியிருந்தார். பாகிஸ்தானின் இந்த கருத்தை சுட்டிக்காட்டி, ஐநாவுக்கு சீனாவும் கடிதம் எழுதியுள்ளது. அதில் ஜம்மு காஷ்மீர் குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கோரிக்கையை ஏற்று மூடப்பட்ட அறையில் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுவதாகவும், அதில் ஜம்மு காஷ்மீர் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜம்மு காஷ்மீருக்கான அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது, சீனாவின் அழுத்தத்தால் ஐநாவில் மூடப்பட்ட அறையில் ஜம்மு காஷ்மீர் குறித்து ஆலோசிக்கப்பட்டது.