உமா குமரன், பிரிட்டன் தமிழ் எம்.பி ட்விட்டர்
உலகம்

பிரிட்டன் | 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கும் தொழிளாளர் கட்சி; எம்.பி.யான முதல் தமிழ்ப் பெண்!

தமிழ் பெண்ணான உமா குமரன் என்பவர் தொழிலாளர் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

Jayashree A

2024 பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் தொழிளாளர் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் கட்சி போட்டி போட்டன. இதில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், தொழிற்கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை தக்கவைத்துக் கொண்டது.

பிரிட்டன் பிரதமராக இருந்த கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் ரிஷி சுனக், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரை எதிர்த்து, தொழிற்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் போட்டியிட்டார். கெய்ர் ஸ்டார்மரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கெய்ர் ஸ்டார்மர்

இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெளியான நிலையில், தொழிற்கட்சி அமோக வெற்றி பெற்று பெரும்பான்மையை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதன்படி இதன் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். தொழிற்கட்சி 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்சர்வேடிவ் கட்சி தோல்வியை தழுவ காரணம் என்ன?

கோவிட் காலத்தில் தேக்கமடைந்த பொருளாதாரத்தையும் நலிந்த தேசத்தையும் உயிர்ப்பிக்க ரிஷி சுனக் தவறியதால், மக்கள் இம்முறை தொழிளாளர்கள் கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆட்சியமைப்பதற்கு 326 இடங்கள் தேவை என்ற நிலையில், கெய்ர் ஸ்டாமரின் தொழிலாளார் கட்சி 400 இடங்களுக்கும் அதிகமாக வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிங் கட்சி 100 இடங்களில் மட்டும் பெற்று படுதோல்வி அடைந்துள்ளது.

இதில் தமிழ் பெண்ணான உமா குமரன் என்பவர் தொழிலாளர் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

உமா குமரன்

யார் இந்த உமா குமரன்?

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், 8 தமிழர்கள் போட்டியிட்ட நிலையில், தொழிலாளர் கட்சி சார்பில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன், அமோக வெற்றி பெற்று முதல் பெண் தமிழ் எம்பி என்ற பெருமையைப் பெற்றவர், ஒரு ஈழத்து தமிழ்பெண்.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்கு பின்னர் இங்கிலாந்துக்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்துள்ளனர். கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரன் அங்குள்ள குயின் மேரி பள்ளியில் படித்தவர், இவர் ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவ் பகுதியில் வசித்து வருகிறார். தான் வசித்து வந்த லண்டன் ஸ்டராட்போர்டு தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றிவாகை சூடியுள்ளார்.

தான் போட்டியிட்ட தொகுதியில் 19,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்த கன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளரான கேன் பிளாக்வெல் 3,144 வாக்குகள் மட்டும் பெற்று 4 வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.