ரஷ்யா  எக்ஸ் தளம்
உலகம்

தொடரும் போர்... ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் காயம்!

Prakash J

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது.

இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக, உக்ரைனின் கை ஓங்கி வருவதாக செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதன்படி, சமீபத்தில் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்திருந்தது. மேலும், ரஷ்ய மக்களின் 74 குடியேற்ற பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், இன்று அதிகாலை, ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள 38 மாடிகள் கொண்ட கட்டடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க: சிக்னல் இல்லை.. சவூதி பாலைவனத்தில் வழிதவறிப் போன இந்திய நபர்.. நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!