உலகம்

பிரிட்டன் பிரதமர் முன்வைத்த திட்டம் நிராகரிப்பு

பிரிட்டன் பிரதமர் முன்வைத்த திட்டம் நிராகரிப்பு

webteam

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டனை பிரிக்கும் பிரெக்ஸிட்டை செயல்படுத்துவதற்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே முன் வைத்த திட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.

ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் எனப்படும் நாடாளுமன்ற கீழவையில் தமது திட்டத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் உரையாற்றிய தெரசா மே, திட்டத்திற்கு எதிரான வாக்கு நிச்சயமற்ற தன்மையை கொண்டுவரும் என்றும் ஐரோப்பிய யூனியன் திட்டத்தை நிராகரிக்க காரணமாக அமையும் என்றும் கூறினார். எனினும் மேவின் திட்டத்திற்கு எதிராக 432 பேரும், ஆதரவாக 202 பேரும் வாக்களித்தனர்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் தனியாக பிரியவேண்டும் என அந்நாட்டு மக்கள் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பில் தெரிவித்திருந்தனர். அதன்படி வரும் மார்ச் 29ம் தேதி ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிய வேண்டும். ஆனால் இந்தப் பிரிவை செயல்படுத்த தெரசா மே முன்வைக்கும் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தெரசா மே திட்டம் மீதான வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான சிறிது நேரத்திலேயே அவருக்கு எதிராக எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரெமி கார்பைன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சமர்ப்ப்பித்தார். அதன் மீது புதன்கிழமை (இன்று) வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.