உலகம்

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவதில் பின்னடைவு 

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவதில் பின்னடைவு 

webteam


விஜய் மல்லையா பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளதால், அவரை இந்தியா அழைத்து வரும் மத்திய அரசின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்த விஜய் மல்லையா, பிரிட்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்திய அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிரிட்டன் நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது. இருப்பினும், மல்லையா தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என லண்டன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. 

இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய, இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு, லண்டன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் உயர்நீதிமன்றத்தில் இன்னும் நான்கைந்து மாதங்களுக்கு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில், மல்லையா வெற்றி பெற்றால், அவரை லண்டன் உயர்நீதிமன்றம் விடுதலை செய்யும். அதேசமயம், தீர்ப்பு மல்லையாவுக்கு எதிராக அமைந்தால் அவர் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் சட்டப்படி, மேல்முறையீட்டு வழக்கை ஓராண்டுக்குப் பிறகே உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்படும் எனக் கூறப்படுகிறது.