உலகம்

டிரைவர் இல்லாத கார்: முயற்சியை ஒத்தி வைத்தது உபெர்

டிரைவர் இல்லாத கார்: முயற்சியை ஒத்தி வைத்தது உபெர்

webteam

உபெர் நிறுவனம் தானியங்கி காரை உருவாக்கும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்பட்ட கார், விபத்துக்கு உள்ளானதை அடுத்து இம்முடிவை உபெர் எடுத்துள்ளது. ஓட்டுனர் தேவைப்படாத காரை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. டெஸ்லா நிறுவனம் கடந்தாண்டு அமெரிக்காவின் புளோரிடாவில் நடத்திய இது போன்ற சோதனையில் கார் டிரைவர் விபத்தில் கொல்லப்பட்டார். கூகுள் நிறுவனமும் இதே போன்ற காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த காரும் கடந்தாண்டு விபத்துக்குள்ளானது. ஓட்டுனர் அற்ற காரை உருவாக்கும் முயற்சியில் விபத்துகள் ஏற்பட்ட போதும் நிறுவ‌னங்கள் மனம் தளராமல் மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தி வருகின்றன.