உலகம்

சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

webteam

சமூக வலைத்தளத்தில் தவறான தகவல் பதிவிட்ட மனித உரிமை ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மனித உரிமை ஆர்வலராக இயங்கி வருபவர் அகமது மன்சூர். சமூக வலைத்தளத்தில் தவறான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான தகவல்களை பரப்பியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அபுதாபி நீதிமன்றம் அகமது மன்சூருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. 

அதுமட்டுமின்றி ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கவுரவத்தையும், அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்தியதற்காக அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.