அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்களும் தேர்தல் பணிகளும் தொடங்கி பரபரப்பாகியுள்ள நிலையில், நவம்பர் 3-ஆம் தேதியன்று அதிபர் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள். அங்குள்ள மக்களும் வழக்கமாக இரண்டு கட்சிகளுக்குத்தான் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். தற்போது மக்களிடம் அதிபர் தேர்தல் பற்றிய பேச்சுகள் விறுவிறுப்படைந்து வருகின்றன.
நவீன சிந்தனைகளின் ஆதரவாளர்களாகக் கூறப்படும் ஜனநாயகக் கட்சி சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஹலாரி கிளிண்டன், அமெரிக்காவின் மிகப் பழமையான குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பிடம் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில். அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆலோசகர் மார்க் மெடோஸ் தெரிவித்தார். அந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெறுவார் என்றும் அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே தேர்தல் பிரச்சார ஆலோசகர் ஜாசன் மில்லர், நவம்பர் 3 ஆம் தேதியன்று தேர்தலை நடத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரும்புவதாகக் கூறியிருந்தார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடன் களமிறங்குகிறார்.