வியாட்நாம் முகநூல்
உலகம்

வியாட்நாம்|’யாகி’ புயல்.. 2 துண்டாக பாலம் உடைந்தது தெரியாமல் ஆற்றுக்குள் பாய்ந்து மூழ்கிய வாகனங்கள்!

ஜெனிட்டா ரோஸ்லின்

பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து தாக்கியது.

இந்தநிலையில், மணிக்கு 149 கி.மீ வேகத்தில் காற்று வீசி பின்னர் ஹனோயில் இப்புயல் கரையை கடந்தது. யாகி புயல் கரையை கடந்தாலும் வியட்நாமில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், வியாட்நாமில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 64 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஹேங் ஆற்றில் பாலம் ஒன்று இரண்டு துண்டாக உடைந்து, பாலத்தின் ஒரு பகுதி ஆற்றில் மூழ்கியது. இதில், ஏராளமான வாகனங்கள் ஆற்றுக்குள் கவிழ்ந்தன.

அப்போது, அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த பஸ்சில் பயணித்த 20 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த மீட்புத்துறையினர் பஸ் பயணிகளின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

மேலும், இந்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால், பொதுமக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வியட்நாம் அரசு உத்தரவிட்டுள்ளது.