உலகம்

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இரண்டு இந்திய பொறியாளர்கள் விடுவிப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இரண்டு இந்திய பொறியாளர்கள் விடுவிப்பு

EllusamyKarthik

2018இல் ஆப்கானிஸ்தான் நாட்டின் கே.இ.சி நிறுவனத்தில் பணிபுரிந்த ஏழு இந்திய பொறியாளர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்தினர்

இந்நிலையில் கடத்தப்பட்ட ஏழு இந்திய பொறியாளர்களில் இருவர் கடந்த ஜூலை 31 அன்று விடுவிக்கப்பட்டதாகவும், அவர்கள் இருவரும் இன்று நாடு திரும்பியுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுவரை ஆறு பொறியாளர்களை தீவிரவாதிகள் விடுவித்துள்ளதாக அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

"கடத்தப்பட்ட பொறியாளர்களை பத்திரமாக மீட்க உதவிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு இந்தியாவின் நன்றி" எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 2019 மார்ச்சில் ஒருவரும், அக்டோபரில் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஐ.நா.பாதுகாப்புக் குழு அறிக்கையில் கடந்த அக்டோபரில் மூன்று பொறியாளர்களை தலிபான்கள் விடுவிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 தலிபான்களை விடுவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் தலிபான்கள் இது குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.