உலகம்

எவரெஸ்ட் உச்சிக்குச் சென்ற இருவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு

எவரெஸ்ட் உச்சிக்குச் சென்ற இருவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு

JustinDurai

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்குச் சென்ற இரு மலையேற்ற வீரர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து மலையேற்ற வீரர்கள் வருகை தருகின்றனர். எவரெஸ்ட் உச்சிக்குச் செல்வதற்கு ஆண்டுதோறும் மே மாதத்தில் மலையேற்ற வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, மே மாத சீசனில் 408 வீரர்களுக்கு மலையேற்றத்துக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த அப்துல் வாராய்ச் எனும் மலையேற்ற வீரர்  எவரெஸ்ட் உச்சியை சென்றடைந்தார். ஆனால், திரும்பி வரும் வழியில் அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு செயற்கை ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் அங்கேயே அவரது உயிர் பிரிந்தது. 

இதேபோல், அமெரிக்காவைச் சோ்ந்த பியூவெய் லியூ, எவரெஸ்ட் சிகரத்துக்குப் பயணம் மேற்கொண்டார். சிகரத்தின் பாதியிலேயே அவருக்கு கடுமையான களைப்பு ஏற்பட்டது. இதனால், அவரால் பயணத்தை தொடர முடியவில்லை. உதவிக்குச் சென்ற குழுவினர் அவரை, முகாமுக்கு அழைத்து வந்தனா். அங்கு வந்த சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். எவரெஸ்டில் இந்த ஆண்டில் நடந்த முதல் உயிரிழப்பாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வீரர்களுக்கு திடீர் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாக பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.