twins pt
உலகம்

வெவ்வேறு ஆண்டில் பிறந்த இரட்டை குழந்தைகள்.. 2 நிமிட இடைவெளியில் மாறிப்போன பிறந்த வருடம்

வெவ்வேறு தேதிகளில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், வெவ்வேறு ஆண்டில் இரட்டைக்குழந்தைகள் பிறந்தார்கள் என்ற செய்தி கொஞ்சம் புதிதாகத்தான் இருக்கிறது.

PT WEB

”நாங்கள் ட்வின்ஸ்தான். ஆனால் அண்ணன் 2023ல் பிறந்தார். நான் 2024ல் பிறந்தேன்” என்று வருங்காலத்தில் பேச இருக்கின்றனர் இரு சகோதரர்கள்.. எங்கு நடந்தது? முழுமையாக பார்க்கலாம்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த தம்பதிதான் பில்லி மற்றும் ஈவ். மனைவி ஈவ் கர்ப்பமாக இருந்த நிலையில், பிரசவ வலி ஏற்பட்டதில் கடந்த டிசம்பர் 31ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இரவு 11.48 மணியளவில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ச்சியாக பிரசவ வலியில் துடித்த அவர், 40 நிமிடங்களுக்கு பிறகு அதாவது, ஜனவரி 1ம் தேதி அதிகாலை 12.28 மணிக்கு மற்றொரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இருவருக்கும் எஸ்ரா மற்றும் எசக்கில் என்று பெற்றோர் பெயர் வைத்துள்ளனர். தாய் மற்றும் குழந்தைகள் நலமாக இருக்கும் நிலையில், "எதிர்காலத்தில் அவர்கள் பிறந்த கதையை நாங்கள் சுவாரஸ்யமாக சொல்ல முடியும்" என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார் தந்தை பில்லி.

இதுகுறித்து அவர் பேசியபோது, “எதிர்காலத்தில் அலுவல் சார்ந்த இடங்களில் பிறந்த தேதியை சொல்வதற்கு இவர்களுக்கு சவாலாக இருக்கும். நாங்கள் ட்வின்ஸ் என்று சொல்லிவிட்டு தேதியை சொல்லும்போது, கேட்பவர்கள் குழம்புவார்கள்” என்னதான் ட்வின்ஸ் என்றாலும், இப்போதே இருவருக்கும் நல்ல வேறுபாடு தெரிகிறது. மூத்த மகன் எஸ்ரா தூங்கிக்கொண்டே இருக்கிறான். எசக்கிலோ துள்ளிக்கொண்டே இருக்கிறான்” என்றுள்ளார்.

இதேபோன்று சுவாரஸ்யமான சம்பவம் குரேஷியாவிலும் அரங்கேறியுள்ளது. அங்கு ஒரு கர்ப்பிணிக்கு டிசம்பர் 31ம் தேதி இரவு 11.59 மணிக்கு ஒரு பெண் குழந்தையும், ஜனவரி 1ம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. 2 நிமிட இடைவெளியில் பிறந்தாலும் இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்தநாளை இக்குழந்தைகள் கொண்டாட இருப்பதுதான் சுவாரஸ்யம்