உலகம்

அமெரிக்காவில் இரு அதிசய தம்பதிகள் தாய்மை அடைந்த மகிழ்ச்சியில் இரட்டையர்

அமெரிக்காவில் இரு அதிசய தம்பதிகள் தாய்மை அடைந்த மகிழ்ச்சியில் இரட்டையர்

webteam

இருவரும் சகோதர்களா என்று கண்டறியமுடியாத அளவுக்கு ஒருவரைப் போல மற்றொருவரும் இருக்கிறார். இன்னொரு பக்கம் இரட்டை சகோதரிகள். இவர்கள் நால்வரும் இணைந்தால் எப்படி இருக்கும். இப்படித்தான் இருக்கும் என்று அளவுகடந்த காதலுடன் திருமணம் செய்துள்ளார்கள். இப்போது தாய்மை அடைந்த மகிழ்ச்சியில் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரிட்டானி மற்றும் பிரையானா டீயானி ஆகிய இரு சகோதரிகளும் ஜோஷ் மற்றும் ஜெரிமி சால்யர்ஸ் என்ற இரட்டைச் சகோதர்களை ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் செய்துகொண்டனர். தற்போது சகோதரிகள் கர்ப்பமாக உள்ளதாக சமூகவலைதளத்தில் இரு தம்பதிகளும் அறிவித்துள்ளனர்.

இந்த அதிசய இரட்டையர்கள் ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அன்று முதல் அவர்கள் சமூகவலைதளங்களில் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். " நாங்களும் இரட்டையர்களைப் பெறவே விரும்புகிறோம், அவர்கள் ஒரே நாளில் பிறக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம்" என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் இரட்டைச் சகோதரர்களில் ஒருவரான ஜெரிமி.