உலகம்

துருக்கியில் பெருவெள்ளம், நிலச்சரிவு: 17 பேர் பலி

துருக்கியில் பெருவெள்ளம், நிலச்சரிவு: 17 பேர் பலி

jagadeesh

துருக்கியில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

துருக்கியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், கருங்கடல் பகுதியை ஒட்டிய பார்டின், காஸ்டாமோனு, சினோப் மற்றும் சாம்சன் மாகாணங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வீடுகளின் மேற்கூரையில் நின்றபடி தவிப்போரை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர்.

இதற்கிடையே துருக்கியின் தென்மேற்கு பகுதியில் உள்ள முகலா மாகாணத்தில் காட்டுத் தீ பரவி வருவதால், வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். ஒரு புறம் கனமழை, மறுபுறம் காட்டுத் தீ என துருக்கியில் இயற்கை சீற்றமடைந்திருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.