வங்கதேசத்தில் ரோஹிங்யா இஸ்லாமியர் வசிக்கும் காக்ஸ் பஸார் பகுதியை துருக்கி அதிபரின் மனைவி எமைன் எர்டோகன் பார்வையிட்டார்.
அங்கு தங்கியிருக்கும் பல்வேறு ரோஹிங்யா குடும்பங்களைச் சந்தித்த அவர், அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். அவருடன் அவரது மகனும் செய்தித் தொடர்பாளருமான பிலால் எர்டோகனும் சென்றிருந்தார். மியான்மரின் ராகினே மாநிலத்தில் ரோஹிங்யா இஸ்லாமியர் வசிப்பற்கு முழு உரிமை இருப்பதாக அவர் தெரிவித்தார். உலகின் மிக முக்கியமான இஸ்லாமிய நாடு என்று அடிப்படையில், ரோஹிங்யா இஸ்லாமியருக்கு ஆதரவாக துருக்கி அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ச்சியாக நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், ரோஹிங்கியா இன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், வன்முறை உள்ளிட்ட காரணங்களால் லட்சக்கணக்கான மக்கள் அங்கிருந்து புலம் பெயர்ந்து வருகின்றனர்.