பருவநிலை மாற்றம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழித்து வரும் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், பருவநிலை மாறுவது நல்ல விஷயம்தான். பருவநிலை மாற்ற பிரச்னைக்காக கோடிக்கணக்கில் செலவு செய்தாலும், பாதிப்பு என்னவோ அமெரிக்காவுக்கு மட்டுமே ஏற்படுவதாகவும், பிற நாடுகள் அதற்காக செலவு செய்வதில்லை என்றும் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நியூயார்க் நகரில் கடும் உறைபனி நிலவுவதால் அமெரிக்காவுக்கு தற்போது உலக வெப்பமயமாதல் அவசியம் என்றும் அவர் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதலை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், இவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.