உலகம்

ஈரானின் ஆளில்லா விமானத்தை வீழ்த்தினோம்: டிரம்ப் அறிவிப்பு, அமைச்சர் மறுப்பு

webteam

ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்கக் கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரித்துள்ளார். ஆனால், அப்படி எந்த தகவலும் வரவில்லை என்று ஈரான் அமைச்சர் மறுத்துள்ளார்.

ஹார்முஸ் (Hormuz) ஜலசந்தியில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க கடற்படை கப்பலுக்கு அருகே, அச்சுறுத்தும் வகையில் ஈரானின் ஆளில்லா விமானம் பறந்து வந்தது என்றும் அதனால் அமெரிக்கக் கடற்படை மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கையில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

தங்கள் வீரர்களையும் அவர்களின் நலன்களை பாதுகாக்கும் உரிமையை அமெரிக்கா கொண்டிருக்கிறது என்று கூறியுள்ள டிரம்ப், சர்வதேச கடல் பகுதியில் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சர்வதேச வர்த்தகத்துக்கு இடையூறாகவும் செயல் பட்டு வரும் ஈரானுக்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

ஆனால், தங்கள் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வரவில்லை என்று ஈரான் வெளியுற வுத் துறை அமைச்சர் ஜரீஃப் தெரிவித்துள்ளார். 

ஜூன் மாதம் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை, ஈரான் சுட்டு வீழ்த்தி இருந்தது.