உலகம்

மரியா புயல் சேதம்: ப்யூர்டோ ரிகோவை பார்வையிட்டார் ட்ரம்ப்

மரியா புயல் சேதம்: ப்யூர்டோ ரிகோவை பார்வையிட்டார் ட்ரம்ப்

webteam


மரியா புயலால் சின்னாபின்னமான ப்யூர்டோ ரிகோவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சேத மதிப்புகளை பார்வையிட்டார். ‌அப்போது பெரிய அளவில் உயிர் சே‌தம் ஏற்படாத அளவுக்கு ப்யூர்டோ‌‌ ரிகோ நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டு தெரிவித்தார்.

மரியா புயலால் ஏற்பட்ட சேதத்தில் இருந்து மீண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரிய உதவிகளை வழங்கவில்லை என ப்யூர்டோ ரிகோ ஆளுநர் ரிகார்டோ அண்மையில் குற்றம்சாட்டி இருந்தார். இந்தச் சூழலில் அதிபர் ட்ரம்ப், தனது மனைவி மெ‌லானியாவுடன் ப்யூர்டோ ரிகோ சென்று சேதங்களை பார்வையிட்‌டார். அப்போது, பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படாத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டது பாராட்டுக்குரியது என தெரிவித்தார். ‌‌அமெரிக்க பட்ஜெட்டையே புரட்‌டிப் போடும் அளவுக்கு ப்யூர்டோ ரிகோ பாதிப்படைந்திருப்பதாக தெரிவித்த ட்ரம்ப், மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஏராளமான நிதி ஒதுக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.