உலகம்

குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் செல்வாக்கை இழக்காத ட்ரம்ப்

குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் செல்வாக்கை இழக்காத ட்ரம்ப்

jagadeesh

பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கியிருந்தாலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான செல்வாக்கு சற்றும் குறையவில்லை என அந்நாட்டின் கோனிபியாக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், தம்மை எதிர்த்து போட்டியிடுவதாக கூறப்படும் ஜோ பிடன் மீது ஊழல் வழக்கு தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என உக்ரைன் அரசிடம் அதிபர் ட்ரம்ப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பதவியில் இருக்கும்போது மற்றொரு நாட்டு தலைவரிடம் அரசியல் ஆதாயத்துக்காக ட்ரம்ப் உதவி கேட்டது பதவிப் பிரமாணத்தை மீறிய செயல் என கூறி ட்ரம்ப் மீதான பதவிநீக்க விசாரணை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

ட்ரம்புக்கு எதிராக கொண்டு வரப்பட்டிருக்கும் பதவி நீ்க்க தீர்மானம் தற்போது பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோனிபியாக் பல்கலைக்கழகம் ட்ரம்ப் மீதான செல்வாக்கு குறித்து கருத்துகணிப்பு நடத்தியது. இதில் அமெரிக்காவை சேர்ந்த 4‌3 சதவீதம் பேர் ட்ரம்ப் சிறந்தவர் என்றும் 52 சதவீதம் பேர் ட்ரம்பின் செயல்களை ஏற்க முடியாது என்றும் வாக்களித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற இதே கருத்துக்கணிப்பில் ட்ரம்புக்கு ஆதரவாக 38 சதவிகிதத்தினரும், எதிராக 58 விழுக்காட்டினரும் அமெரிக்கர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். பல்வேறு குற்றச்சாட்டுகளில் ட்ரம்ப் சிக்கியிருந்தாலும் அவர், மீதான செல்வாக்கு அமெரிக்கர்கள் மத்தியில் சற்றும் குறையவில்லை என சமீபத்திய கருத்துக் கணிப்புகள் உணர்த்துகின்றன.