உலகம்

பாதியிலேயே முடிந்த ட்ரம்ப்-கிம் பேச்சுவார்த்தை

பாதியிலேயே முடிந்த ட்ரம்ப்-கிம் பேச்சுவார்த்தை

webteam

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் இடையேயான பேச்சுவார்த்தை பாதியிலேயே நிறைவடைந்தது. 

இருநாட்டு தலைவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டாவது முறையாக நடைபெற்றது. நேற்று இரு நாட்டு தலைவர்களும் இரவு உணவில் பங்கேற்ற நிலையில், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது வடகொரியாவில் உள்ள அணு ஆயுத தொழிற்சாலையை முற்றிலும் ஒழிப்பதற்கு அதிபர் கிம் ஜோங் உன் சம்மதம் தெரிவித்தார். 

அதற்கு பிரதிபலனாக, வடகொரியா மீதான தடைகளை அமெரிக்கா முற்றிலும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.‌  இதற்கு ட்ரம்ப் ஒத்துக்கொள்ளாத நிலையில் பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிவடைந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இரு தலைவர்களுக்கும் இடைய் 3-வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறாது என்றார். இதனால் இரு நாடுகள் இடையேயான மோதல் போக்கு தொடரும் எனப்படுகிறது. அத்துடன் வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை அழிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.