சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேசியுள்ளனர். வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இந்த சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைப்பெற்றது.
உலகின் இரு துருவங்களாக கருதப்படும் ட்ரம்ப்பும் கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு உலக அரங்கில் மிகச் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அணு ஆயுத சோதனை, பொருளாதார தடை போன்ற பிரச்னைகளுக்கு இந்த சந்திப்பின் மூலம் தீர்வு ஏற்படும் என இரு தலைவர்களும் கூறியுள்ளனர். சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து, பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் 48 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
48 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், 2ம் கட்டமாக மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் அதிபர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பு மிகச் சிறப்பாக இருந்தது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னைகளை தீர்க்க இரு தலைவர்களும் இணைந்து செயல்பட முடிவு எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.