உலகம்

இந்தியர்களின் அமெரிக்க வேலை கனவுக்கு சிக்கல்: ஹெச்1பி விசா முடக்கம் நீட்டிப்பு

இந்தியர்களின் அமெரிக்க வேலை கனவுக்கு சிக்கல்: ஹெச்1பி விசா முடக்கம் நீட்டிப்பு

webteam

வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1பி உள்ளிட்ட பல்வேறு விசாக்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை அமெரிக்கா வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசா வழங்குவது கடந்தாண்டு 2 முறை நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 3ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அமெரிக்கர்கள் கணிசமாக வேலையிழந்துள்ள நிலையில் நிலைமை மேலும் மோசமடைவதை தடுக்கும் வகையில் வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை அந்நாடு கொண்டுவந்துள்ளது.

ட்ரம்ப் அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் அமெரிக்க வேலை கனவுடன் உள்ள ஏராளமான இந்திய ஐ.டி.துறையினர் பாதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் அரசின் விசா நடைமுறை கொடூரமானது என கூறியிருந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், தான் அதிபராக பதவியேற்றவுடன் விசா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.