ட்ரம்ப், கமலா ஹாரிஸ் pt web
உலகம்

இன்னொரு நேரடி விவாதம்: அழைப்பு விடுத்த கமலா ஹாரிஸ்... ‘வாய்ப்பே இல்ல ராஜா’ என்ற டிரம்ப்!

PT WEB

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், தெற்கு கரோலினா பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் உடன் மேலும் ஒரு நேரடி விவாத நிகழ்ச்சியை நடத்த வாக்காளர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்” கூறினார்.

இந்நிலையில், கமலா ஹாரிசுடன் நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என டிரம்ப் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தோல்வி அடைந்தவர்களே மீண்டும் ஒரு வாய்ப்பு வேண்டுமென கேட்பார்கள்” என்று கமலா ஹாரிசை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கெனவே தனது முதல் நேரடி விவாதம் ஜோ பைடன் உடனும், இரண்டாவது நேரடி விவாதம் கமலா ஹாரிசுடனும் நிறைவடைந்து விட்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த செவ்வாய்கிழமையன்று நடந்த நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களை முன்வைத்து இருவரும் காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.