உலகம்

கொரோனா பாதித்த அமெரிக்கர்களுக்கு ரூ.75,000 உதவித் தொகை!

கொரோனா பாதித்த அமெரிக்கர்களுக்கு ரூ.75,000 உதவித் தொகை!

webteam

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை உதவித் தொகையாக தர திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் நக்கின் உடன் இணைந்து வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் கடினமானதாக உள்ளதாகவும் ஆனால் இதிலிருந்து நாடு விரைவில் மீளும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா பரவலை தடுத்து நிறுத்துவதற்காக பொது மக்கள் தத்தமது வீடுகளுக்குள்ளேயே உற்சாகமாக தங்கியிருக்கலாம் என்றும் ட்ரம்ப் அறிவுறுத்தினார். கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து வந்ததால் அதை சீன வைரஸ் என அழைக்கலாம் என ட்ரம்ப் மீண்டும் ஒரு முறை தெரிவித்தார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை உதவித் தொகையாக தர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிபிட்டார்.

அடுத்து பேசிய துணை அதிபர் மைக் பென்ஸ், கொரோனா பாதித்தவர்களை கையாள ராணுவத்தை கொண்டு விரைவாக மருத்துவமனைகள் உருவாக்கப்படும் என தெரிவித்தார். ட்ரம்ப் அரசு எடுக்கவுள்ள பொருளாதார ஊக்க நடவடிக்கைகள் மூலம் ஒரு லட்சம் கோடி டாலர் தொகை அமெரிக்க பொருளாதாரத்தில் புழக்கத்தில் விடப்படும் என்று நிதியமைச்சர் நக்கின் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.