உலகம்

‌முன்னாள் அதிபர்கள் குறித்த ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை

webteam

அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள், உயிர்த் தியாகம் செய்த வீரர்களை கெளரவிக்கவில்லை என அதிபர் ட்ரம்ப் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பி‌ரிக்காவில் உள்ள நைஜரில், பய‌ங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்ட அமெரிக்‌க சிறப்புப் படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்த அதிபர் ட்ரம்ப், விரை‌வில் அவர்களை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார். மேலும் முன்னாள் அதிபர்கள் ஒபாமா, புஷ் போன்றோர் உயிர் தியாகம் செய்த வீரர்களை கெளரவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினா‌ர். இந்த குற்றச்சாட்டை, ‌ஒபாமா ஆட்சிக் காலத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த முன்னாள் அதிகாரி அலிஸா மாஸ்டிரே‌மொனாகோ உடனடியாக மறுத்துள்ளார். ட்ரம்ப் முழுமையாக பொய் சொல்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பால், தனது குற்றச்சாட்டை ட்ரம்ப் வாபஸ் பெற்றுக் கொண்டார்.