உலகம்

கிம் - ட்ரம்ப் மெனுவுக்கு 101 கோடியா..? அடேங்கப்பா...

கிம் - ட்ரம்ப் மெனுவுக்கு 101 கோடியா..? அடேங்கப்பா...

webteam

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு‌ மதிய உணவுக்காக இடம் பெறும் உணவுகள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் இன்று சந்தித்தனர்.இந்த சந்திப்பு உலக அரங்கில் மிகச் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அணு ஆயுத சோதனை, பொருளாதார தடை போன்ற பிரச்னைகளுக்கு இந்தச் சந்திப்பின் மூலம் தீர்வு ஏற்படும் என இரு தலைவர்களும் கூறியுள்ளனர். ட்ரம்ப் - கிம்முடனான சந்திப்பு உலக நாடுகளிடையே மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நான்கு நாட்களுக்கு நடைபெறும் இந்த உச்சி மாநாட்டுக்காக சிங்கப்பூர் அரசு 101 கோடி ரூபாய் செலவிடுவதாக பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார். இந்த செலவு முழுவதையும் சிங்கப்பூர் அரசு ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்புக்கு சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்துள்ள மதிய உணவு குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில் பாரம்பரியமிக்க இரால் கோக்டெய்லுடன் அவகடோ சலாட், பச்சை மாங்காய் கெரபுடன் ஹனி லைம் ட்ரெஸ்சிங் மற்றும் ஆக்டோபஸ்.  மேலும் வெள்ளரிக்காய், மாட்டிறைச்சி, காளான், முட்டை உள்ளிட்டவை கலந்து தயாரிக்கப்படும் 'Oiseon' எனப்படும் கொரிய நாட்டின் புகழ்பெற்ற டிஷ் ஒன்றும் ஸ்டார்டராக பரிமாறப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஃபீப் ஷார்ட் ரிப் கான்பிட் எனப்படும் ஒயின் ஊற்றி செய்யப்படும் உணவு, அவிக்கப்பட்ட பிரக்கோலியுடன் potato dauphinois, ரெட் வொயின் சாஸ், பன்றிக்கறியுடன் கூடிய Yangzhou ஃப்ரைட் ரைஸ், சில்லி சாஸ், Daegu jorim soy braised cod fish with radish, மற்றும் காய்கறிகள். டார்க் சாக்லெட் டார்ட்லெட் கனாசே, Haagendazs வென்னிலா ஐஸ்க்ரீம் மற்றும் செர்ரி கவுலிஸ் டிராபிஜின்னே ஆகியவை சாப்பாட்டுக்கு பிந்தைய Desserts உணவு ஆகும்.

இதனிடையே, இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பின் போது சிங்கப்பூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு மதிய உணவு பரிமாறப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களுடன் அதிகாரிகளுக்கும் இந்த மெனுவில் உள்ள உண்வுதானாம். இந்த ராயல் சாப்பாடு வகைகளுக்கு சுவைக்கு தான் சிங்கப்பூர் அரசு முக்கியத்துவம் தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.