உலகம்

பலூசிஸ்தான் விடுதலைப் போராளி மெஹ்ரான் ஸ்விட்சர்லாந்தில் கைது

பலூசிஸ்தான் விடுதலைப் போராளி மெஹ்ரான் ஸ்விட்சர்லாந்தில் கைது

webteam

பலூசிஸ்தான் மாகாண விடுதலைக்காக போராடி வரும் மெஹ்ரான் மர்ரி அவரது குடும்பத்தினருடன் ஸ்விட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டார். 

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில், பலூசிஸ்தான் பிரதிநிதியாக அவர் இருந்து வருகிறார். கைது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பாகிஸ்தான் அரசு தூண்டுதலின் பேரில், சுரிச் விமான நிலையத்தில் தானும் தனது குடும்பத்தினரும் பல மணி நேரம் பிடித்து வைக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தான் ஸ்விட்சர்லாந்துக்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மெஹ்ரான் குறிப்பிட்டுள்ளார். 

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் அமைந்துள்ள ஸ்விட்சர்லாந்து நாட்டில் தனக்கு இத்தகைய கதி நேர்ந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார். தனது இரண்டு குழந்தைகளையும் பிடித்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என்று மெஹ்ரான் கேள்வி எழுப்பியுள்ளார். 

பாகிஸ்தானிலிருந்து விடுதலை கோரி போராடி வருபவர், பலூசிஸ்தான் மக்கள் இயக்கத்தின் தலைவர் மெஹ்ரான் மர்ரி. அது தொடர்பான ஒரு கூட்டத்தில் பங்கேற்க ஜெனீவா சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.