சகோதரிகள் மெலிஸ்ஸா மற்றும் ஜார்ஜியா  ட்விட்டர்
உலகம்

லண்டன்: முதலையிடம் போராடி சகோதரியை காப்பாற்றிய பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சர்யம்...!

Jayashree A

லண்டனைச் சேர்ந்த இரட்டை சகோதரிகளான மெலிஸ்ஸா மற்றும் ஜார்ஜியா இருவரும் 2021 ஜுன் மாதம் மெக்சிகோவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு Puerto Escondido என்ற இடத்தில் உள்ள ஏரியில் படகில் பயணித்துள்ளனர்.

அச்சமயம் ஏரியில் இருந்த முதலை ஒன்று மெலிஸ்ஸாவை கடித்து தண்ணீருக்குள் இழுத்துள்ளது. இதைக்கண்டு பதறிய ஜார்ஜியா, தனது சகோதரியை காப்பாற்ற எண்ணி சற்றும் தாமதிக்காமல் தானும் தண்ணீருக்குள் குதித்து, முதலையுடன் போராடியுள்ளார். இதில் முதலை ஜார்ஜியாவையும் தாக்கியுள்ளது. இருப்பினும் தனது சகோதரியை காப்பாறுவதற்காக போராடிய ஜார்ஜியா, முதலையின் முகத்தை ஆக்ரோஷமாக தாக்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஜார்ஜியாவின் தாக்குதலை சமாளிக்கமுடியாத முதலை மெலிஸ்ஸாவை விட்டுள்ளது. இதில் முதலை தாக்குதலுக்கு ஆளான ஜார்ஜியா வின் மணிக்கட்டு வயிறு கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தாக இருந்த சகோதரிகள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உயிர் பிழைத்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் லண்டன் அரண்மனையிலிருந்து ஜார்ஜியாவிற்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் முதலையுடன் போராடி சகோதரியை காப்பாற்றியதற்காக லண்டன் அரசாங்கம் அவருக்கு உயரிய விருதான Gallantry Medal வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சகோதரிகள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள்.