உலகம்

ஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்தினால் காத்திருக்கும் நோய்கள்!

ஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்தினால் காத்திருக்கும் நோய்கள்!

webteam

ஸ்மார்ட்போனை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு உயருக்கு ஆபத்தான நோய்கள் வரும் என்று ஆய்வு ஒன்று தெரிவித் துள்ளது.

இன்றைய உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது ஸ்மார்ட்போன். அது இல்லாமல் எதுவும் முடியாது என்ற நிலைக்கு அனைவரும் வந்துவிட்டார்கள். குட்டி லேப்டாப் போல செயல்படுகிறது, ஸ்மார்ட்போன்கள். இதன் மோகம் இன்னும் அதி கரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு உயருக்கு ஆபத்தான நோய்கள் வரும் என்று அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சைமன் போலிவர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

’’ஸ்மார்ட்போனில் தினமும் அதிக நேரம் செலவிடுபவர்கள், அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்கள், துரித உணவுகள், இனிப்புகள் போன்றவற்றைச் சாப்பிடுகின்றனர். இவர்கள் உடல் உழைப்பு இல்லாமல் இருக்கின்றனர். இதனால், மந்த நிலை, இளம் வயதிலேயே இறப்பு, நீரிழிவு, இருதய நோய், பல்வேறு புற்றுநோய் மற்றும் தசைப்பிடிப்பு நோய்கள் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார் கொலம்பியா சைமன் போலிவர் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான மிராரி மண்டில்லா. 

கடந்த ஆண்டு 1040 மாணவர்கள், 700 பெண்கள், 360 ஆண்கள் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ’’இன்றைய நவீன உலகத்தில் ஸ்மார்ட் போன்கள் தவிர்க்க முடியாதது என்றாலும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் நடை முறைகளை மேம்படுத்தவும் அது பயன்படுத்தப்பட வேண்டும்’’ என்கிறார் அவர்.