தேசிய நிறுவன நாளை முன்னிட்டு வடகொரியா மீண்டும் அணுகுண்டு அல்லது ஏவுகணை சோதனையில் ஈடுபடலாம் என ஜப்பான் அச்சம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அண்மையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியது. அத்துடன் ஆறாவது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில், நாளை அந்நாட்டின் தேசிய நிறுவன நாள் கொண்டாடப்படவுள்ளதால் மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ அல்லது அணுகுண்டு சோதனையோ வடகொரியா நடத்தும் என ஜப்பான் கணித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த தேசிய நிறுவன நாள் கொண்டாட்டத்தின்போது ஐந்தாவது முறையாக வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.