உலகம்

ஹாலிவுட் தம்பதிக்கு கொரோனா பாதிப்பு

ஹாலிவுட் தம்பதிக்கு கொரோனா பாதிப்பு

webteam

தனக்கும், தனது மனைவி ரீட்டா வில்சனுக்கும் கொரோனா இருப்பதாக பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவத் தொடங்கிய வுஹான் மாகாணத்தில் அதன் தாக்கம் கட்டுக்குள் வந்திருப்பதாக சீன அதிபர் ஷி ஜின் பிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனக்கும் தனது மனைவி ரீட்டா வில்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு 63 வயதாகிறது. இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம், ரீட்டாவும் நானும் ஆஸ்திரேலியாவில் இருக்கிறோம். எங்களுக்கு சளி, உடல் வலிகள் இருப்பதுபோல சற்று சோர்வாக உணர்ந்தோம். ரீட்டாவுக்கு குளிரும் வந்து போயின. லேசான காய்ச்சலும் கூட.

நாங்கள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோம். அப்போது கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சரி, இப்போது அடுத்து என்ன செய்வது? மருத்துவ அதிகாரிகளுக்கு நெறிமுறைகள் உள்ளன. அவை பின்பற்றப்பட வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் வரை நாங்கள் சோதனை செய்யப்படுவோம், தனிமைப்படுத்தப்படுவோம். உலகை புதுப்பிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.