உலகம்

ஒலிம்பிக்ஸ்: தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் காலிறுதிக்கு தேர்வு; இளவேனில் - அபுர்வி தோல்வி

ஒலிம்பிக்ஸ்: தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் காலிறுதிக்கு தேர்வு; இளவேனில் - அபுர்வி தோல்வி

நிவேதா ஜெகராஜா

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நேற்றைய தினம் தொடங்கிய நிலையில், அதில் மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் கலந்துக்கொண்ட இளவேனில் மற்றும் அபுர்வி தோல்வியடைந்துள்ளனர். மற்றொருபக்கம், வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் அணி காலியிறுதிக்கு தகுதிபெற்றுள்ளனர்.

காலியிறுதியில் தென்கொரிய அணியை எதிர்கொள்கிறது இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் அணி.

இந்தியாவிற்கு இன்று மிக முக்கிய நாளாக அமையுமென தெரிகிறது. ஏனெனில் இந்தியாவின் முன்னனி ஒலிம்பிக் நட்சத்திரங்கள் பதக்கங்களை தீர்மானிக்கும் பல்வேறு போட்டிகளில் இன்று களமிறங்கவுள்ளனர்.

இந்திய அணிக்கு குறைந்தபட்சம் 2 பதக்கங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், நிச்சயம் 6க்கும் மேற்பட்ட பதக்கங்கள் டோக்யோவில் இந்தியாவுக்கு வசப்படும் எனவும் விளையாட்டு வல்லுநர்கள் பலரும் கணித்துள்ளனர். மல்யுத்தம், குத்துச்சண்டை, துப்பாக்கிச் சுடுதல், பேட்மிண்டன் என 18 பிரிவுகளில் இந்திய அணி வரும் நாட்களில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் மிரா பாய் சானு, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சவ்ரப் திவாரி, அபிஷேக் வர்மா களமிறங்கவுள்ளனர்.