அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ட்ரம்பிற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து. மேலும், ட்ரம்புடன் நெருங்கி பணியாற்றுவதை எதிர்நோக்கி காத்திருப்பதாக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவு.
அமெரிக்காவை மீண்டும் வலிமையான வல்லரசாக மீட்டெடுக்க ட்ரம்ப் உறுதி. போர்களை தொடங்கப் போவதில்லை என்றும் போர்கள் நிறுத்தப்படும் எனவும் வெற்றி உரை...
அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக கமலா ஹாரிஸ் பேச்சு.
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதை மாற்றி தெற்கையும் வளர்த்திருக்கிறோம் என கோவையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும் விஷ காய்ச்சல் பரவி வருகிறது என்றும், திமுக ஆட்சியில் மருத்துவத்துறை சீரழிந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
திருச்செந்தூரில் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது கந்த சஷ்டி திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.இந்நிலையில், பொன்னேரி ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கியது தண்ணீர்.
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
மாஞ்சோலையில் தலைமுறை தலைமுறையாக இருந்தவர்களை அப்புறப்படுத்தலாமா என உயர் நீதிமன்றம் கேள்வி.
தேயிலை தோட்ட தொழிலாளர்களை அகற்றுவதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா லோக் ஆயுக்தா அலுவலகத்தில் ஆஜர்.இந்நிலையில், நில முறைகேடு வழக்கு தொடர்பாக 2 மணி நேரம் வரை விசாரணை.
இஸ்ரேல் உடனான மோதலுக்கு போர்க்களத்தில்தான் தீர்வு என ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயிம் காசிம் பேச்சு. தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால் மட்டுமே மறைமுக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புள்ளது என திட்டவட்டம்.