இன்றைய காலை தலைப்புச் செய்திகள் PT
உலகம்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்| 2வது நாளாக முடங்கிய மைக்ரோசாஃப்ட் To ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு!

PT WEB
  • மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகம் முழுவதும் 2வது நாளாக முடங்கிய தொழில்நுட்ப சேவைகளால் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

  • மைக்ரோசாஃப்ட் முடங்கியதால் உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், திட்டமிட்ட பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏராளமானோர் பாதிப்படடைந்துள்ளனர்.

  • உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்னைக்கு மன்னிப்பு கோரியது Crowdstrike நிறுவனம்.இந்நிலையில், சிக்கலுக்கு தீர்வு காண தீவிரமாக பணியாற்றி வருவதாக மைக்ரோசாப்ட் விளக்கமளித்துள்ளது.

  • ஆளுநர் ஆர்.என்.ரவிவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு. இந்நிலையில், தமிழக சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை என தகவல்.

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்தவரை பிடித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

  • கடலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொடூர கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

  • கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

  • தொடர் கனமழையால் திரும்பும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கர்நாடகா. தக்ஷின கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை.

  • வங்கதேச நாட்டில் நாடு தழுவிய ஊரடங்கு அமல் மாணவர் போராட்டங்கள், வன்முறைகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • தமிழகத்தை சேர்ந்த இந்துமதி கதிரேசனுக்கு சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருது அளித்து, இந்திய கால்பந்து கூட்டமைப்பு கவுரவித்துள்ளது.