காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
உலகம்

Headlines | கனடாவில் இந்து கோயில் மீது தாக்குதல் முதல் இன்று நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வரை!

இன்றையக் காலை தலைப்புச் செய்தியானது, கனடாவில் இந்து கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடியின் கண்டனம் முதல் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • கனடாவில் இந்து கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது என தெரிவித்துள்ளார்.

  • புதிதாக கட்சி தொடங்குவோர் எல்லாம் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்கள் என தவெக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

  • தமிழக வெற்றிக்கழகத்தின் தீர்மானங்கள் விஜய் திமுகவில் சேர்ந்துவிடலாம் என்பது போல் இருக்கின்றன என பாஜக தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம்.

  • கொள்கை என்ற பெயரில் அரைத்த மாவையே அரைக்கிறார் தவெக தலைவர் விஜய் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு.

கொலை செய்யப்பட்ட சிறுமி
தவெக தலைவர் விஜய்
  • மேஜர் முகுந்த்துக்கு எந்த அடையாளமும் வேண்டாம் என அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டார்கள் என அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்.

  • ராஜபாளையம் அருகே ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், சிக்கிக்கொண்ட இருவரை போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்.

  • ஓசூர் அருகே, உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி துடிதுடித்த நபர், உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

  • காரில் வேகமாக சென்றவர்களை தட்டிக்கேட்ட மாணவர் மீது சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக தாய் குற்றச்சாட்டு.

  • சென்னை அமைந்தகரையில் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுமியின் தாயிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை.

  • திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் மயங்கி விழுந்த மாணவர்கள். இந்தநிலையில், வாயுக்கசிவுக்கான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை எனக் கூறும் மாசு கட்டுப்பாட்டு வாரியம்.

  • நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா சம்மன். வரும் 6ஆம் தேதி ஆஜராக உத்தரவு.

  • அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல். வெற்றியை தீர்மானிக்கும் மாகாணங்களில் ட்ரம்ப், ஹாரிஸ் இறுதிகட்ட பரப்புரை.