பாகிஸ்தானில் சமீபகாலமாக அடிக்கடி குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், மஸ்டங் மாவட்டத்தில் இன்று மசூதி ஒன்றின் அருகே மத வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்ற இடத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 57 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த குண்டுவெடிப்பு தற்கொலைப் படை தாக்குதல் என்பதை பலுசிஸ்தானின் காவல்துறைத் தலைவர் அப்துல் காலிக் ஷேக் உறுதிப்படுத்தி உள்ளார். பலூசிஸ்தானின் இடைக்கால உள்துறை அமைச்சர் ஜன் அசக்சாயி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பாகிஸ்தானில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.