உலகம்

திருப்பூர்: போலி ஆதார் மூலம் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

திருப்பூர்: போலி ஆதார் மூலம் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

kaleelrahman

திருப்பூர் மாவட்டத்தில் போலி ஆதார் கார்டுகளுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வங்கதேசத்தில் இருந்து ஏராளமானோர் மேற்குவங்கம் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் வந்து, போலி ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை தயாரித்து அங்கிருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பின்னலாடை நகரான திருப்பூர் போன்ற நகரங்களில் தங்குவதுண்டு. அதேபோல், உரிய பாஸ்போர்ட் உள்ளிட்டவை இன்றி தங்கியிருந்தவர்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். தற்போது மீண்டும் திருப்பூர் மாநகரில் யாரேனும் சட்டவிரோதமாக தங்கியுள்ளார்களா என அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பூர் அம்மாபாளையம் ராக்கியாபாளையத்தில் வசித்து வந்த ஷிமுல் காஸி (30) பெருமாநல்லூர் காளம்பாளையத்தை சேர்ந்த மன்னன் மோல்லல் (31) திருப்பூர் சிட்கோ பொன்னாபுரம் பகுதியில் வசித்துவந்த சைஃபுல் இஸ்லாம் (40) ஆகிய 3 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது குறித்தும், மத்திய உளவுத்துறை மற்றும் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீசார் உதவியுடன் மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், 3 பேரும் திருப்பூரில் உள்ள வெவ்வேறு பனியன் நிறுவனங்களில் தொழிலாளியாக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதில், ஷிமுல் காஸி இரண்டு வருடங்களாகவும், மன்னன் மோல்லல், சைஃபுல் இஸ்லாம் ஆகியோர் 5 வருடங்களாகவும் திருப்பூரில் தங்கியுள்ளது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த ஆவணங்களை கைப்பற்றியதில் 2 போலி ஆதார்கார்டுகள் இருந்ததும் தெரியவந்துள்ளது.