உலகம்

திபெத்- நேபாளம் நெடுஞ்சாலை திறப்பு: தெற்கு ஆசியாவில் கால் பதிக்க முயலும் சீனா

திபெத்- நேபாளம் நெடுஞ்சாலை திறப்பு: தெற்கு ஆசியாவில் கால் பதிக்க முயலும் சீனா

webteam

திபெத் வழியாக நோபளம் செல்லும் நெடுஞ்சாலையை சீனா இன்று திறந்து வைத்தது.

பொதுமக்களுக்கு மட்டுமின்றி ராணுவ பயன்பாட்டுக்காகவும் இந்த நெடு‌ஞ்சாலை திறக்கப்பட்டிருப்பதன் மூலம், தெற்காசிய நாடுகளை சீனாவால் எளிதாக அணுக முடியும் என அந்நா‌ட்டின் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திபெத்தின் ஜிகேஸ் விமான நிலையத்தில் இருந்து நகரின் மையப் பகுதி வரை 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலையின் சிறிய பகுதி நேபாள எல்லை நகரமான லாசாவையும் இணைக்கிறது. இதன் மூலம் விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் அரை மணி நேரத்துக்குள் எளிதாக செல்ல முடியும். இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச எல்லையை ஓட்டி திபெத் நகரில் இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.