உலகம்

குளறுபடி நடக்கிறது; வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவேன் - ட்ரம்ப்

குளறுபடி நடக்கிறது; வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவேன் - ட்ரம்ப்

webteam

ட்ரம்ப் கருத்துக்கு ட்விட்டர் ஆட்சேபம் தெரிவித்துள்ளது

அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் சேர்த்து 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அதிபர் இருக்கையில் அமர முடியும். இந்திய நேரப்படி மதியம் 1 மணியளவில் 238 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார் ஜோ பைடன். ட்ரம்ப் 213 ஓட்டுகள் பெற்று பின்னடைவாகவே இருக்கிறார். இந்நிலையில் தேர்தல் வெற்றியை ஜோ பைடன் கட்சியினர் திருடுவதாக ட்வீட் செய்தார். அதற்கு ட்விட்டர் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

தேர்தல் விதிகளுக்கு எதிராக ட்ரம்ப் கருத்துகளை பதிவிடுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. மேலும் வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் பெரிய மோசடி நடப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வாக்குகளை எண்ணும் பணியை நிறுத்த உச்ச நீதிமன்றம் செல்வேன் எனவும் ட்ரம்ப் தெரிவித்துளார். ட்ரம்பின் இந்த பேச்சு அமெரிக்க தேர்தலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.