உலகம்

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்க படைகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்க படைகள்

JustinDurai
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தாலிபான்களுக்கு எதிரான போரின் மையப்பகுதியாக விளங்கி வரும் பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் 20 ஆண்டுகளுக்கு பின் வெளியேறின. இது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேறுவதில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
உலகை உலுக்கிய அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்து வந்த ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த அமெரிக்கா, அங்கு படைகளை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.