உலகம்

கருப்பின பெண்கள் மீது கவனம் செலுத்த வைக்கும் சுவர் ஓவியம்

webteam

கருப்பின பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், லண்டன் சாலைகளில் உள்ள சுவர்களில், கருப்பின பெண்களை வண்ண ஓவியங்களாக வரைந்து வருகிறார் ஓவியர் ட்ரெப். 

பிரபல சுவர் ஓவியக் கலைஞரான நீக்குயே ட்ரெப் டெசேன், லண்டனில் உள்ள சுவர்களில், கருப்பின பெண்களின் ஓவியங்களை வரைந்து வருகிறார். சமீப காலமாக பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகளிலிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டுமென்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தவும், வலுவான கருப்பின பெண்களை பாதுகாப்பது அவசியம் என்று வலியுறுத்தவும் இந்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக ட்ரெப் தெரிவித்துள்ளார். 

அந்த வகையில், கிழக்கு லண்டனில் உள்ள சோஹோ பகுதியில் உள்ள ஒரு சுவரில் 20 அடி உயரத்தில் மஞ்சள் நிறத்தில் உடை அணிந்தபடி கைகளில் வளையல்களுடன், தனது முடியை தலைப்பாகையால் கட்டியபடி, அலங்கரிக்கப்பட்ட கருப்பின பெண்ணின் புகைப்படத்தை அவர் வரைந்துள்ளார். ஓவியத்தில் வரையப்பட்டுள்ள ஹோலி டயானா என்ற இந்த பெண், பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளுக்கு எதிராக போராடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.