உலகம்

“உள்நாட்டு பாதுகாப்பே முக்கியம்”- சீன மாணவர்களின் விசாக்களை ரத்து செய்த அமெரிக்கா 

“உள்நாட்டு பாதுகாப்பே முக்கியம்”- சீன மாணவர்களின் விசாக்களை ரத்து செய்த அமெரிக்கா 

EllusamyKarthik

ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன மாணவர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்களின் விசாக்களை உள்நாட்டு பாதுகாப்பை காரணம் காட்டி ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது அமெரிக்கா. 

அமெரிக்காவின் ரகசியத் தகவல்களை சீன ராணுவத்துடன் தொடர்பில் உள்ள சீனாவை சேர்ந்தவர்கள் திருடி வருவதாக அதிபர் ட்ரம்ப் கடந்த மே மாதம் குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அமெரிக்கா.

கடந்த 2018-19 கல்வியாண்டில் மட்டும் அமெரிக்காவில் படிக்க சுமார் 370000 மாணவர்கள் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

விசா மறுக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் அரசின் சந்தேக பார்வையில் சிக்கியதாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் அரசு அதிகாரி ஒருவர்.

சீன ராணுவத்துடன் தொடர்பில் இல்லாத சீனாவை சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவில் தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு இதுவரை சீனா எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.