உலகம்

பசுபிக் பெருங்கடலில் வெடித்துச் சிதறிய எரிமலை - தாக்கிய சுனாமி

பசுபிக் பெருங்கடலில் வெடித்துச் சிதறிய எரிமலை - தாக்கிய சுனாமி

JustinDurai

பசுபிக் பெருங்கடலில், எரிமலை வெடித்துச் சிதறியதில் சுனாமி உருவானது.

நியூசிலாந்தை ஒட்டிய தெற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறியது. 260 கிலோ மீட்டர் சுற்றளவில், சுமார் 20 கிலோ மீட்டர் உயரத்துக்கு எரிமலை குழம்பை கக்கியது. திடீரென எரிமலை வெடித்ததால், ஆழிப் பேரலைகள் உருவாகி, பசுபிக் பெருங்கடலில் உள்ள சில தீவுகளை தாக்கின.

டோங்கா தீவின் தலைநகரான நூக்குஅலோஃபா-வை சுனாமி தாக்கியதில், ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அமெரிக்கன் சமோவா தீவின் தலைநகர் பாகோ பகோவையும் சுனாமி தாக்கியது.